Logo

வர்த்தகச்சின்ன அறிவித்தல்

வர்த்தகச் சின்னங்கள் மற்றும்/அல்லது வர்த்தகப் பெயர்கள் அடங்கலாக பல்வேறுபட்ட புலமைச் சொத்துக்கள் உரிமையை லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் மற்றும் அதன் துணை/இணை நிறுவனங்கள் கொண்டுள்ளன. வேறு சட்ட உரிமைகளுக்குப் புறம்பாக, இந்த இணையத்தளத்திலும், லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட்டின் ஏனைய உறுப்பு நிறுவனங்களின் இணையத்தளங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற அனைத்து வர்த்தகச் சின்னங்கள், இலச்சனைகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள் முறையே லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் அல்லது அதன் துணை மற்றும்/அல்லது இணை நிறுவனங்களின் உடமையாக உள்ளதுடன், இலங்கை மற்றும்/அல்லது சர்வதேச புலமைச் சொத்து சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன.

லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் மற்றும் அதன் துணை அல்லது இணை நிறுவனங்களுக்குச் சொந்தமான வர்த்தகச் சின்னங்கள், இலச்சனைகள் மற்றும்/அல்லது வர்த்தகப் பெயர்கள் அடங்கலாக புலமைச் சொத்துக்களை உபயோகிக்கும் எவரும் அனுமதியற்ற நோக்கத்திற்கு அல்லது வர்த்தகச் சின்னத்தின் தனித்துவத்தைப் பாதிக்கின்ற அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒத்த வர்த்தகச் சின்னங்களை பயன்படுத்தும் எவரும் உரித்தாளரின் உரிமைகளை மீறியமைக்குப் பொறுப்புக் கூறல் வேண்டும். இந்த இணையத்தளத்தை உபயோகிக்கும் எவரும், அவருக்கு லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் அல்லது அதன் துணை/இணை நிறுவனங்களின் எழுத்து மூலமான அனுமதி வழங்கப்பட்டாலன்றி, மேற்குறிப்பிட்ட சின்னங்கள் மற்றும் பெயர்கள் தொடர்பில் எவ்விதமான உரிமையையோ, ஆர்வத்தையோ கொண்டிருக்க முடியாது.

இந்த இணையத்தளத்திலுன்ள லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிட்டெட் மற்றும் அதன் துணை அல்லது இணை நிறுவனங்களுக்குச் சொந்தமான வர்த்தகச் சின்னங்கள் எவையும் லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் அல்லது அதன் துணை/இணை நிறுவனங்களின் எழுத்து மூலமான அனுமதி வழங்கப்பட்டாலன்றி, பிரசுரம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ, பதிவிறக்கம் செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, அனுப்பவோ, பிரதி செய்யவோ, மீள உற்பத்தி செய்யவோ, விநியோகிக்கவோ அல்லது மீள்பிரசுரம் செய்யவோ முடியாது.