backgrounf img

லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் இலங்கையில் பல்வேறு வியாபாரத் துறைகளில் கால்பதித்துள்ள மிகப் பாரிய கூட்டு நிறுவனங்களுள் ஒன்றாகவும், நம்பிக்கையை வென்றெடுத்துள்ள ஒரு வர்த்தகநாமமாகவும் திகழ்ந்து வருகின்றது. 1995 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட லாஃப்ஸ், இன்று 20 தொழிற்துறைகள் மத்தியில் தனது தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், மின்வலு மற்றும் எரிசக்தி, சில்லறை வியாபாரம்,கைத்தொழில்,சேவைகள்,பொழுதுபோக்கு, பண்ட இடப்பெயர்வு மேலாண்மை மற்றும் அசைவற்ற ஆதன இருப்பு ஆகிய தொழிற்துறைகளில் இலங்கையிலும், அதற்கு வெளியிலும் உறுதியான காற்தடத்தைக் கொண்டுள்ளது.

loign background

முகாமைத்துவப் பணிப்பாளரின் செய்தி

“ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் மிகவும் எளிமையான ஆரம்பத்துடன் உதித்த லாஃப்ஸ், அனைத்து இலங்கை மக்களின் வாழ்விலும் தினசரி தொடர்புபடுகின்ற அளவிற்கு பரந்துபட்ட வியாபாரத் துறைகளில் கால் பதித்து, இலங்கையில் காத்திரமான ஒரு வியாபார சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியுள்ளமை நிச்சயம். எமது தொழிற்பாடுகள் அனைவற்றிலும் நேர்த்திக்கு எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களும் கிடையாது என்பதே எமது கொள்கையாக உள்ளது. “லாஃப்ஸ்” தனித்துவமான இனங்காணல் அங்கீகாரத்தையும், நன்மதிப்பையும் சம்பாதிப்பதற்கு இதுவே துல்லியமான காரணம். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பெறுமதியை வழங்குவதுடன், இதனாலேயே லாஃப்ஸ் மதிப்பைப் சம்பாதித்து வருகின்றது. இதனாலேயே நாம் எப்போதும் தொடர்ச்சியாக நேர்த்தியையும்,பெறுமதியையும் வழங்கி வருகின்றோம்.”

- யூ.கே. திலக் டி சில்வா -

gradient
bw