Logo
  • LUBRICANTSலாஃப்ஸ் கேஸ்
  • AUTOகேஸ் ஓட்டோ லங்கா
  • PETROLIUMலாஃப்ஸ் பெட்ரோலியம்
  • hydro1லாஃப்ஸ் பவர்
  • LUBRICANTSலாஃப்ஸ் லுப்ரிகன்ட்ஸ்
  • LUBRICANTSலாஃப்ஸ் கேஸ் பங்களாதேஷ்
  • slogalSLOGAL சக்தி DMCC

LAUGFS Gas PLC

லாஃப்ஸ் கேஸ் பீஎல்சி, கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொது உடமை நிறுவனமாகத் திகழ்வதுடன், தரம் மற்றும் நிலைபேறு ஆகியவற்றின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகின்றது. நாடெங்கிலும் தொழிற்படுகின்ற 3,500 இற்கும் மேற்பட்ட முகவர்கள் மற்றும் 22 விநியோகத்தர்களை உள்ளடக்கிய விசாலமான வலையமைப்பைக் கொண்டுள்ள லாஃப்ஸ் கேஸ் வர்த்தக,கைத்தொழில் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான திரவ பெட்ரோலிய வாயு தீர்வுகளை பல்வேறு வடிவங்களில் பிரத்தியேகமாக வழங்கி வருகின்றது.

Gas Auto Lanka Ltd.

1994 ஆம் ஆண்டில் இலங்கையில் மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயுவை உபயோகிக்கும் முறையை அறிமுகப்படுத்துவதில் லாஃப்ஸ் முன்னோடியாகச் செயற்பட்டிருந்தது. இதற்கமைவாக ISO சேவை தர அங்கீகாரத்துடன் இத்தகைய சேவைகளை வழங்குவதற்கு முதலில் முன்வந்த ஒரு இலங்கை நிறுவனமாக மாறியதுடன், வாகனங்களுக்கான வாயு மாற்றீட்டு தொழிற்துறையில் நிறுவனம் கால்பதித்திருந்தது.

LAUGFS Petroleum (Pvt) Ltd.

லாஃப்ஸ் பெட்ரோலியம், தினசரி 30,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை உள்ளடக்கியவாறு, மிக விரைவாக விஸ்தரிப்படைந்து வருகின்ற வலையமைப்புடன் இலங்கையில் பெட்ரோலிய தொழிற்துறையில் முதல் மூன்று இடங்களிலுள்ள மிகப் பாரிய சில்லறை விற்பனையாளர்களுள் ஒன்றாக தனது உறுதியான ஸ்தானத்தைக் கட்டியெழுப்பியுள்ளது. இலங்கையில் வர்த்தக நிறுவனங்களுக்கு சில்லறை எரிபொருள் விநியோகத்தை வழங்குவதற்கு அருகாமை தொடர்பாடல் முறைமையை பெட்ரோலிய சில்லறை விநியோகத் தொழிற்துறையை முதன் முதலாக உபயோகித்த நிறுவனம் என்ற பெருமையையும் லாஃப்ஸ் கொண்டுள்ளது.

LAUGFS Power Ltd.

மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள லாஃப்ஸ் பவர், பலாங்கொடை ரண்முத்து ஓயாவிலுள்ள சிறிய அளவிலான நீர் மின்வலு உற்பத்தி நிலையத்தின் மூலமாக தேசிய மின்விநியோகத்திற்கு மின்சாரத்தை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய மின் விநியோகத்திற்கு 34 கிகா வாற் மின்வலுவை விநியோகிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள 20 மெகா வாற் இணை ஆற்றலுடன், இலங்கையில் மிகப் பாரிய சூரிய மின்வலு செயற்திட்டத்தை 2016 ஆம் ஆண்டில் லாஃப்ஸ் பவர் ஆரம்பிக்கவுள்ளது.

LAUGFS Lubricants Ltd.

வாகனங்கள் மற்றும் கைத்தொழிற்துறைகளுக்கு பல்வேறுபட்ட மசகு எண்ணெய் உற்பத்திகளை வழங்குவதற்காக இலங்கையின் முதலாவது மசகு எண்ணெய் வர்த்தகநாமமான லாஃப்ஸ் ஓயிலை 2008 ஆம் ஆண்டில் லாஃப்ஸ் லுப்ரிகன்ட்ஸ் அறிமுகப்படுத்தியிருந்தது. உள்நாட்டு நிலைமைகளுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை இயந்திர எண்ணெய் வகைகளை உற்பத்தி செய்வதற்காக நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வசதிகளைக் கொண்ட, நாட்டின் முதலாவதும், ஒரேயொரு நிலையமுமான Tribology பூங்காவையும் லாஃப்ஸ் லுப்ரிகன்ட்ஸ் ஆரம்பித்திருந்தது.

LAUGFS Gas (Bangladesh) Ltd.

Petredec Elpiji Limited என்ற பெயரில் முன்னர் அழைக்கப்பட்ட லாஃப்ஸ் கேஸ் (பங்களாதேஷ்) லிமிட்டெட் பங்களாதேஷிலுள்ள மிகப் பாரிய திரவ பெட்ரோலிய வாயு விநியோக நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்வதுடன், ஒவ்வொரு வருடமும் 25,000 மெட்ரிக் தொன் அளவிற்கும் அதிகமான திரவ பெட்ரோலிய வாயுவை இறக்குமதி செய்து, விநியோகித்து வருகின்றது. 1997 ஆம் ஆண்டில் உள்நாட்டு திரவ பெட்ரோலிய வாயு நீரோட்டத்தில் கால்பதித்த நாம், கடந்த ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு, 31 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருடாந்த விற்பனைப் புரள்வுடன் நாடெங்கிலும் விசாலமான விநியோக வலையமைப்பை ஸ்தாபித்துள்ளோம்.மொங்லா துறைமுகத்தில் 1,800 மெட்ரிக்தொன் களஞ்சிய வசதியுடன், உலகத்தரம் வாய்ந்த திரவ பெட்ரோலிய வாயு இறக்குமதி,கொள்கலன் அடைத்தல் மற்றும் விநியோக வசதியை லாஃப்ஸ் தொழிற்படுத்தி வருகின்றது.

SLOGAL Energy DMCC

துபாய் தலைமையிடமாக, SLOGAL சக்தி DMCC மேலும் LAUGFS தான் உலக ஆற்றல் இருப்பை வலுப்படுத்த அமைக்கப்பட்டது. ஆற்றல் வர்த்தகம் பற்றிய ஒரு முதன்மை மையமாக கொண்டு, SLOGAL மேலும், பெறுவதற்கான, நிர்வகிப்பது எல்பிஜி நாளங்கள் இயக்க மற்றும் வரைவு உட்பட கடல்சார் சேவைகளை வழங்கி பரந்த போர்ட்ஃபோலியோ வழங்குகிறது.

gradient

Powering growth with new energy frontiers

LAUGFS’s pioneering vision and strong focus on supporting the growing energy needs of the country have propelled our expansion into what we are today.... an energy conglomerate powering growth of nations.