backgrounf img

லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் இலங்கையில் பல்வேறு வியாபாரத் துறைகளில் கால்பதித்துள்ள மிகப் பாரிய கூட்டு நிறுவனங்களுள் ஒன்றாகவும், நம்பிக்கையை வென்றெடுத்துள்ள ஒரு வர்த்தகநாமமாகவும் திகழ்ந்து வருகின்றது. 1995 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட லாஃப்ஸ், இன்று 20 தொழிற்துறைகள் மத்தியில் தனது தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், மின்வலு மற்றும் எரிசக்தி, சில்லறை வியாபாரம்,கைத்தொழில்,சேவைகள்,பொழுதுபோக்கு, பண்ட இடப்பெயர்வு மேலாண்மை மற்றும் அசைவற்ற ஆதன இருப்பு ஆகிய தொழிற்துறைகளில் இலங்கையிலும், அதற்கு வெளியிலும் உறுதியான காற்தடத்தைக் கொண்டுள்ளது.

loign background

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் அதன் துணை/இணை நிறுவனங்களின் (இத்தால் “LH” என்று விழிக்கப்படுகின்ற) இணையத்தளத்திற்கு (இதன் பின்னர் “இணையத்தளம்” என விழிக்கப்படுகின்ற) உங்களை வரவேற்கின்றோம். இந்த இணையத்தளத்தை உபயோகிப்பதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும்/அல்லது பாவனையாளர்கள் இந்த இணையத்தளத்தின் பாவனை தொடர்பான கீழ்வருகின்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (“பாவனை தொடர்பான விதிமுறைகள்”) மற்றும் தனிப்பட்ட விபரங்களின் இரகசியம் பேணல் கொள்கைக்கு கட்டுப்படுகின்றர் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். எவ்விதமான முன்னறிவித்தல்களுமின்றி பாவனை தொடர்பான விதிமுறைகள் மற்றும் தனிப்பட்ட விபரங்களின் இரகசியம் பேணல் கொள்கையில் எந்நேரமும் திருத்தங்களை அல்லது மாற்றங்களை மேற்கொள்ளும் உரிமையை LH கொண்டுள்ளது.

  • இணையத்தள பாவனை தகவல் தொடர்பில் பார்வையாளர்கள்/பாவனையாளர்களுக்கு பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக இந்த இணையத்தளத்தை உபயோகிப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட, கைமாற்றம் செய்ய முடியாத அனுமதியை LH வழங்குகின்றது.
   • (அ) ஆவணங்கள் அல்லது உள்ளடக்கங்கள் தனிப்பட்ட, தகவல் அறியும், வர்த்தகநோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப்பட முடியம்.
   • (ஆ) ஆவணங்களை அல்லது உள்ளடக்கங்களை எவ்விதத்திலும் திருத்தம் செய்ய அல்லது மாற்றம் செய்ய முடியாது. புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் “நியாயமான பாவனைக்கு” உபயோகிப்பதைத் தவிர, இந்த இணையத்தளத்திலுள்ள தகவல்களை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ LH அல்லது அதன் குறித்த துணை/இணை நிறுவனங்களின் அனுமதியின்றி பாவனையாளர்கள் வேறு நோக்கங்களுக்காக உபயோகிக்கவோ, பதிவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ, பிரதி செய்யவோ, அச்சிடவோ, காட்சிப்படுத்தவோ, இயற்படுத்தவோ, மீள்பிரதி செய்யவோ, பிரசுரிக்கவோ, உரிமம் பெறவோ, அனுப்பவோ, பரிமாற்றம் செய்யவோ அல்லது விநியோகிக்கவோ முடியாது.
 • பொது மன்றங்கள் மற்றும் தொடர்பாடல்கள்
  • “மன்றம்” எனப்படுவது இந்த இணையத்தளத்தின் ஒரு பாகமாக கிடைக்கப்பெறுகின்ற ஒரு விவாதக் குழு, அரட்டைப் பகுதி, தகவல் பலகை, செய்தி குழு, LH இற்கான கடிதம், அதன் இணைய நிர்வாகி அல்லது ஊழியர்கள், அல்லது மின்னஞ்சல் தொழிற்பாடு ஆகிய அனைத்தையும் குறிக்கும். பின்வரும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் மன்றம் ஒன்றினூடாக பதிவேற்றம், மின்னஞ்சல், அனுப்புதல், பிரசுரித்தல் அல்லது பரிமாற்றம் செய்ய மாட்டோம் என்பதை பாவனையாளர்களும்/பார்வையாளர்களும் இத்தால் ஏற்றுக்கொள்கின்றனர்.
   • (அ)பொய்யான அல்லது தவறான;
   • (ஆ) அவதூறான அல்லது தீங்கான;
   • (இ) மற்றொருவரின் அந்தரங்கத்தைத் துன்புறுத்தும் அல்லது எல்லை மீறும், எந்தவொரு குழுவிற்கோ அல்லது தனிநபருக்கோ எதிராக மதவெறி, இனவெறி,வெறுப்பு அல்லது தீங்கை ஊக்குவிக்கின்ற;
   • (ஈ) ஆபாசமான, நிர்வாணமான அல்லது அபச்சாரமான விடயங்கள், குற்றச்செயல் என்று கருதப்படுகின்ற, சமூகத்தின் உரிமைகளை மீறுகின்றது என சட்டத்தின் பால் கருதப்படுகின்ற விடயங்கள்;
   • (உ) புலமைச்சொத்துக்கள் சட்டம் உட்பட மற்றொருவரின் உரிமைகளை மீறுகின்ற விடயங்கள்;
   • (ஊ) கோரப்படாத, தேவையற்ற பெருவாரி மின்னஞ்சல், “குப்பை அஞ்சல்,” “எண்ணற்ற ஸ்பாம்” அல்லது சங்கிலித்தொடர் அஞ்சல்கள், அல்லது
   • (எ) பொருத்தமான சட்டங்கள் அல்லது ஒழுக்காற்று விதிமுறைகளை மீறுதல்
  • மன்றங்கள் வர்த்தக நோக்கற்ற தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நிதி திரட்டல், ஊக்குவிப்பு, விளம்பரப்படுத்தல், பொருட்கள் அல்லது சேவைகளைப் பெற்றுக்கொள்ளல் அல்லது ஏனைய வர்த்தகரீதியான விடயங்களுக்கான நோக்குடன் பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் விநியோகிக்கவோ அல்லது பிரசுரிக்கவோ கூடாது. இணையத்தளத்தின் ஏனைய பாவனையாளர்களை எவ்விதமான வர்த்தகரீதியாக டிஜிட்டல்ரீதியாக அல்லது பாரம்பரிய ஊடக ரீதியாக அல்லது வேறு நிறுவனத்திற்காகவோ ஒன்றுதிரட்ட மாட்டோம் என்பதையும் பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். LH இனால் அங்கீகார அனுமதி வழங்கப்பட்டாலன்றி, LH இணையத்தளத்தின் ஏனைய பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல் விபரங்களை சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ மாட்டோம் என்பதையும் பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
  • எந்தவொரு உள்ளடக்கத்தையும் எந்தவொரு மன்றத்தையும் பதிவேற்றுதல், மின்னஞ்சல், அனுப்புதல், பிரசுரித்தல் அல்லது பரிமாற்றம் செய்தல் அல்லது எவ்விதமான உள்ளடக்கத்தையும் LH இடம் சமர்ப்பித்தல் மூலமாக பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் தாமாகவே LH இற்கு அவற்றை உலகளாவில், முடிவின்றிய, உரிமைப் பங்கு கொடுப்பனவு இன்றிய, மாற்ற முடியாத, தனிப்பட்ட அல்லாத, மற்றும் முழுமையாக துணை அனுமதி உரிமை கொண்ட, பாவிக்கும் அனுமதியுடன் அவற்றை மீள உற்பத்தி செய்யவோ, திருத்தம் செய்யவோ, உள்வாங்கிக் கொள்ளவோ, பிரசுரிக்கவோ, பரிமாற்றம் செய்யவோ மற்றும் அத்தகைய உள்ளடக்கங்களை எந்த வடிவத்திலும், ஊடகத்திலும் அல்லது எதிர்காலத்தில் அறிமுகமாகின்ற தொழில்நுட்பத்தின் மூலமாகவும் பயன்படுத்தும் அனுமதியை வழங்குவதாக ( அல்லது அத்தகைய உரிமைகளை வெளிப்படையாகக் கொண்டுள்ள) கருதப்படும்.மேலும், உள்ளடக்கத்திலுள்ள அனைத்து “தார்மீக உரிமைகளும்” விலக்களிக்கப்பட்டுள்ளன என்பதையும் பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் அனுப்புகின்ற, பதிவேற்றம் செய்கின்ற, பிரசுரிக்கின்ற அல்லது சமர்ப்பிக்கின்ற அனைத்து உள்ளடக்கங்களுக்கும் LH எவ்விதமான பொறுப்பையும் ஏற்காது.
  • இந்த இணையத்தளத்தினூடாக பரிமாற்றம் செய்யப்படுகின்ற அல்லது பெற்றுக் கொள்ளப்படுகின்ற எந்தவொரு தகவலையும் கண்காணிக்கின்ற அல்லது மீளாய்வு செய்கின்ற உரிமையை LH கொண்டுள்ளதுடன், பொருத்தமற்றது அல்லது இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுகின்றது என LH இனால் கருதப்படுகின்ற எந்தவொரு தகவலை தணிக்கை, திருத்தம், அகற்றல் அல்லது தடை செய்கின்ற உரிமையையும் கொண்டுள்ளது. கண்காணிக்கும் நேரங்களில் தகவல்கள் ஆய்வு, பதிவு அல்லது பிரதி செய்யப்படுவதுடன், இந்த இணையத்தளத்தின் பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் அத்தகைய கண்காணிப்பு மற்றும் மீளாய்விற்கு தமது ஒப்புதலை அளிக்கின்றனர்.
 • பாவனையை நிறுத்துதல்
  • இந்த இணையத்தளத்துடன் பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் தொடர்புபட்ட எந்தவொரு கணக்கு(கள்) மற்றும் பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் இணையத்தளத்தினுள் உள்நுழையும் அனுமதியை தன்னிச்சையாக, எந்நேரத்திலும் தடை செய்யும் உரிமையை LH கொண்டுள்ளதாக பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இணையத்தளத்தினுள் நுழைவதை LH அல்லது இதற்காக நியமிக்கப்பட்ட எந்தவொரு நபரும் கண்காணிக்கலாம்.
  • இத்தடை காரணமாக சட்டத்தின் அல்லது பங்கு அடிப்படையில் LH இற்கு கிடைக்க வேண்டிய எந்த நிவாரணத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமையை அது கொண்டுள்ளது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முடிவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் பாவனையாளர்கள்/பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் முடிவுக்கு வருவதுடன், LH இற்கு மீண்டும் மாற்றப்படும்.
  • இந்த இணையத்திற்கான நுழைவு அனுமதியை நிறுத்துவதால் பாவனையாளர்கள்/பார்வையாளர்களுக்கு எழக்கூடிய எவ்விதமான இழப்புக்களுக்கும் LH பொறுப்பேற்காது.
 • மூன்றாம் தரப்பு இணையத்தளங்கள், உள்ளடக்கம், உற்பத்திகள் மற்றும் சேவைகள்
  • மூன்றாம் தரப்பினரிடமிருந்து இணையத்தளங்கள், உள்ளடக்கும், உற்பத்திகள் மற்றும் சேவைகளை அடைந்து கொள்ளும் இணைப்புக்களை இந்த இணையத்தளம் வழங்குவதுடன், இதில் அடங்கியுள்ள பாவனையாளர்கள், விளம்பரதாரர்கள், இணை நிறுவனங்கள் மற்றும் அணுசரனையாளர்கள் போன்றோரின் விபர இணைப்புக்கள் பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் சௌகரியத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளதுடன், இத்தகைய இணையத்தளங்களை LH அங்கீகரிக்கின்றது எனக் கருத முடியாது. மூன்றாம் தரப்பு இணையத்தளங்களில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கங்களுக்கு LH பொறுப்பேற்காது என்பதை பாவனையாளர்களும்/பார்வையாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். ஏனைய இணையத்தளங்களை பார்வையிட முன்னர் அவை தொடர்பான தனிப்பட்ட விபரங்களைப் பேணும் கொள்கை மற்றும் அவற்றின் தலைப்புக்களை பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும். கருத்துக்கள், ஆலோசனை, கூற்றுக்கள் மற்றும் விளம்பரங்கள் அடங்கலாக இந்த இணையத்தளத்தினூடாக மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கங்களுக்கு LH பொறுப்பேற்காது என்பதை பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதுடன், அத்தகைய உள்ளடக்கங்களின் பாவனையால் ஏற்படும் அனைத்து ஆபத்துகளுக்கும் தாங்களே பொறுப்பேற்கின்றனர் என்பதையும் பாவனையாளர்கள் பார்வையாளர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் மூன்றாம் தரப்பு ஒன்றிடமிருந்து எந்த விதமான உற்பத்திகள் அல்லது சேவைகளை கொள்வனவு செய்ய விரும்பினால், பாவனையாளர்கள்/பார்வையாளர்களுடனான உறவுமுறை நேரடியாக மூன்றாம் தரப்பினருடனானது. LH பின்வருவனவற்றிற்கு பொறுப்பேற்காது என்பதை பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
   • (அ) மூன்றாம் தரப்பினரின் உற்பத்திகள் மற்றும் சேவைகளின் தரம்
   • (ஆ) உற்பத்திகள் மற்றும் சேவைகளின் விநியோகம், உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திகள் அல்லது சேவைகளின் உத்தரவாத கடப்பாடுகள் அடங்கலாக பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் மூன்றாம் தரப்பினருடன் கொண்டுள்ள அனைத்து விதிமுறைகள். எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் ஏற்படுத்திக்கொள்கின்ற கொடுக்கல்வாங்கல் காரணமாக பாவனையாளர்கள்/பார்வையாளர்களுக்கு ஏற்படக்கூடிய எவ்விதமான நட்டத்திற்கும் LH பொறுப்பேற்காது என்பதையும் பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
 • பொறுப்புத்துறப்பு
  • வெளிப்படையாகக் குறிப்பிட்டாலன்றி, இந்த இணையத்தளத்திலுள்ள அனைத்து உள்ளடக்கங்கள், தகவல்,மென்பொருள், இணையத்தளத்தால் வழங்கப்படுகின்ற உற்பத்திகள் மற்றும் சேவைகள், “அவ்வாறே”, “கிடைக்கின்ற” அடிப்படையில் தரப்பட்டுள்ளதுடன், தவறுகள், விடுபாடுகள் மற்றும் அச்சுப் பிழைகளைக் கொண்டிருக்கலாம். மறைமுகமான வியாபார உத்தரவாதங்கள், குறிப்பிட்ட நோக்கம் மற்றும் வரம்பை மீறாத வகையிலான, வியாபாரத்தில் ஈடுபடும் போது அல்லது பாவனையின் போது எழுகின்ற சட்டரீதியான விடயங்கள் அடங்கலாக எவ்விதமான வெளிப்படையான அல்லது மறைமுகமான உத்தரவாதங்களுக்கும் LH வெளிப்படையாக தனது பொறுப்புத்துறத்தலைத் தெரிவித்துக் கொள்கின்றது. பின்வருவனவற்றிற்கு LH உத்தரவாதம் அளிக்காது.
   • (அ) இணையத்தளம் பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் தேவைகளை ஈடுசெய்தல்;
   • (ஆ) இணையத்தளம் இடையறாத,நேரகாலத்திலான, பாதுகாப்பான அல்லது தவறுகள் அற்ற அடிப்படையில் கிடைக்கப் பெறுதல்;
   • (இ) இந்த இணையத்தள பாவனையின் மூலமாக அல்லது இணையத்தளத்தின் மூலமாக கிடைக்கப்பெறுகின்ற எவ்விதமான சேவைகளின் மூலமாகவும் பெற்றுக்கொள்கின்ற பெறுபேறுகள், துல்லியமானவை,நேர்த்தியானவை, நடப்பு காலத்திற்கு உரியவை அல்லது நம்பகமானவை, அல்லது
   • (ஈ) இந்த இணையத்தளத்தின் மூலமாக கிடைக்கப்பெறுகின்ற எந்தவொரு உற்பத்திகள், சேவைகள், தகவல், அல்லது பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் இதன் மூலமாக கொள்வனவு செய்கின்ற அல்லது பெற்றுக்கொள்கின்ற பொருட்கள், பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்கின்றமை
   • (உ) இந்த இணையத்தளம், அதன் சேர்வர்கள் அல்லது LH இடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற எந்தவொரு மின்னஞ்சலும் வைரஸ் அல்லது ஏனைய ஆபத்தான அம்சங்கள் அற்றவை.
  • இந்த இணையத்தளப் பாவனையின் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்கின்ற அல்லது பெற்றுக்கொள்கின்ற எந்தவொரு உள்ளடக்கம், மூல விடயங்கள், தகவல் அல்லது மென்பொருள் பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் சொந்த தீர்மானத்திற்கு அமைவாகவும், ஆபத்திற்கு அமைவாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இணையத்தளப் பாவனையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்கின்ற அல்லது பெற்றுக்கொள்கின்ற எந்தவொரு உள்ளடக்கம், மூல விடயங்கள், தகவல் அல்லது மென்பொருள் காரணமாக பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் கணினிக்கு ஏற்படுகின்ற சேதாரங்களுக்கு LH எவ்விதத்திலும் பொறுப்பேற்காது. எவ்விதமான முன்னறிவித்தலுமின்றி எந்த வேளையிலும் மாற்றங்களை அல்லது தகவல்களை புதுப்பிக்கும் உரிமையை LH கொண்டுள்ளது.
 • பொறுப்பேற்பதற்கான வரம்பு எல்லை
  • LH இன் பூரண அலட்சியம் அல்லது திட்டமிட்ட தவறுகளைத் தவிர்த்து, பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் இந்த இணையத்தளத்தை அடைவதால் அல்லது உபயோகிப்பதால் எழுகின்ற எவ்விதமான நேரடியான, மறைமுகமான, தற்செயலான, விசேட அல்லது விளைவால் ஏற்படுகின்ற சேதங்கள், அல்லது இலாபம், வருமானம், தரவு அல்லது பாவனைக்கான இழப்புக்களுக்கு LH, அதன் துணை மற்றும் இணை நிறுவனங்கள் எவ்வேளையிலும் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டாது.
  • மேலே கூறப்பட்டது ஒருபுறம் இருக்க, இந்த இணையத்தளம் அல்லது அதன் உள்ளடக்கத்தின் மூலமாக மேற்குறிப்பிட்ட எந்தவொரு தொழிற்பாட்டுடனும் தொடர்புடையதாக எவ்விதத்திலும் எழுகின்ற எந்த இழப்பு அல்லது சேதத்திற்கும் LH நிறுவனமே பொறுப்பு என தீர்மானிக்கப்படும் பட்சத்தில், LH இன் பொறுப்பு 10,000 இலங்கை ரூபா தொகைக்கு மேற்படாது.
  • இந்த இணையத்தளத்தை அடைவதால் அல்லது உபயோகிப்பதால் பாவனையாளர்கள்/பார்வையாளர்களுக்கு ஏற்படக்கூடிய எவ்விதமான இழப்பீட்டு கோரிக்கையும் பொருத்தமான சட்டங்களுக்கு அமைவாக அத்தகைய இழப்பீடு ஏற்பட்ட அல்லது நேர்ந்த திகதியிலிருந்து ...... தினங்களுக்குள் தெரியப்படுத்தப்படல் வேண்டும்.


 • முன்காப்பீடு
  • பார்வையாளர்கள்/பாவனையாளர்கள் இந்த இணையத்தளத்தை அடைவதால் அல்லது உபயோகிப்பதால் எழக்கூடிய சட்டத்தரணியின் நியாயமான கட்டணங்கள் மற்றும் செலவுகள் அடங்கலாக எவ்விதமான இழப்பீட்டுக் கோரல்கள்,பொறுப்புக்கள்,சேதங்கள், இழப்புக்கள் அல்லது செலவுகளையும் LH PLC, அதன் துணை மற்றும் இணை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள், பணிப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் முகவர்களிடமிருந்து அறவிட முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் முன்காப்பீட்டை பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.


 • தனிப்பட்ட விபரங்களின் இரகசியம் பேணல் கொள்கை
  • பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் தனிப்பட்ட விபரங்களின் இரகசியத்தைப் பேணுவதில் LH மிகவும் அக்கறை கொண்டுள்ளதுடன், அது தொடர்பான கொள்கை ஒன்றையும் வடிவமைத்துள்ளது. பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் தற்போது அமுலில் உள்ள தனிப்பட்ட விபரங்களின் இரகசியம் பேணல் கொள்கை தொடர்பான தகவலை இங்கே கண்டறிய முடியும்.


 • பராயமடையாதோர் தொடர்பான குறிப்பு
  • பராயடையாதோர் (16 வயதிற்கு உட்பட்டவர்கள்) இந்த இணையத்தளத்தை உபயோகிப்பதற்கு தகைமை அற்றவர்கள் என்பதுடன், அவர்களின் தனிப்பட்ட விபரங்களை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் தாங்கள் இந்த இணையத்தளத்தை உபயோகிப்பதற்கு தேவையான சட்டரீதியான வயதுடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதுடன், இந்த இணையத்தளத்தை உபயோகிப்பதால் எழக்கூடிய எவ்விதமான விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பேற்று, உரிய சட்டரீதியான நடைமுறைகளுக்கு முகங்கொடுப்பர் என்பதை உறுதி செய்கின்றனர்


 • சட்ட இணக்கம்
  • பொருத்தமான சட்டங்கள் மற்றும் ஒழுக்காற்று விதிகளை மீறும் வகையில் இணையத்தளத்தை, அல்லது இந்த இணையத்தளத்தின் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்ற உள்ளடக்கம்,மென்பொருள், உற்பத்திகள் மற்றும் சேவைகளை அடைய, பதிவிறக்கம் செய்ய, உபயோகிக்க அல்லது ஏற்றுமதி செய்ய மாட்டோம் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.


 • மேலதிக விதிமுறைகள்
  • இந்த இணையத்தளத்தின் மூலமான முற்பதிவுகள்,பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்வனவுகள் மற்றும் ஏனைய பயன்பாடுகள் தொடர்பில் மேலதிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளதுடன், அத்தகைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படுகின்றனர் என்பதை பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்


 • பொருத்தமான சட்டங்கள்
  • பார்வையாளர்கள்/பாவனையாளர்கள் இந்த இணையத்தளத்தை அடைதல் மற்றும் பயன்படுத்தல் சம்பந்தமான அனைத்து விடயங்களும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சட்ட ஆட்சிக்கு உட்பட்டவை. பார்வையாளர்கள்/பாவனையாளர்கள் இந்த இணையத்தளத்தை அடைதல் மற்றும் பயன்படுத்தல் சம்பந்தமான எவ்விதமான சட்ட நடவடிக்கை அல்லது உத்தரவுகளுக்கும் மேற்குறிப்பிடப்பட்ட இலங்கை குடியரசின் தகுதி வாய்ந்த நீதிமன்றத்தை நாட முடியும். பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் மற்றும் LH ஆகியன இந்த நீதிமன்றங்களில் சட்ட ரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ளவும், அத்தகைய சட்ட நடவடிக்கைகளுக்கு அவை முறையான இடம் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர்.


 • இடைக்கால தீர்வு
  • இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுகின்ற அல்லது மீற முயலுகின்ற போது LH இற்கு சீர்படுத்த முடியாமல் போகின்ற சேதம் ஏற்படுகின்ற நிலைமைகளில், சட்டத்தில் போதிய தீர்வுகள் மூலமாக அதன் தொகையை சரியாக கணிக்க முடியாது என்பதை பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் இத்தால் ஏற்றுக்கொள்கின்றனர். இதற்கமைவாக பாவனையாளர்கள்/பார்வையாளர்கள், அல்லது அவர்களது துணைவர்கள், பங்காளர்கள், அல்லது முகவர்கள் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுகின்ற அல்லது மீற முயலுகின்ற போது தகுதி வாய்ந்த எந்தவொரு நீதிமன்ற அதிகாரத்தின் கீழும் இடைக்காலத் தீர்வாக தடையுத்தரவைப் பெற்றுக்கொள்ளும் உரிமை LH இற்கு உண்டு. சட்டத்தரணியின் நியாயமான கட்டணங்கள் அடங்கலாக அத்தகைய தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கு LH செலவிட்ட அனைத்து செலவுகளையும் பாவனையாளர்கள்/பார்வையாளர்களிடமிருந்து அறவிடும் உரிமையையும் LH கொண்டுள்ளது.


 • காப்புரிமை/வர்த்தகச்சின்ன தகவல்
  • "LAUGFS" வர்த்தகச் சின்னங்கள் அனைத்தும் லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் நிறுவனம், அதன் துணை/இணை நிறுவனங்களுக்கு உரித்துடையவை.
bw