Logo

இரகசியம் பேணல் கொள்கை

லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்கள் (LH), பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் தொடர்பாக இணையத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்கின்ற தகவலை எவ்வாறு இரகசியமாகப் பேணுகின்றன என்பதையும், www.laugfs.lk என்ற இணையத்தளத்தை உசாவும் போதும், இதனுள் இடம்பெற்றுள்ள விடயங்கள் தொடர்பாகவும் பாதுகாப்புடன் உள்ளனர் என்ற உணர்வைக் கொண்டுள்ளமையை அவர்கள் விளங்கிக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

எமது இணையத்தளத்தைப் பார்வையிடுகின்ற எந்தவொரு நபராலும் சமர்ப்பிக்கப்படுகின்ற அவரது தனிப்பட்ட விபரங்களை LH எந்தவொரு மூன்றாம் தரப்புடனும் பகிர்ந்து கொள்வதில்லை. அனுமதிக்கப்பட்டுள்ள LH பணியாளர்கள் அல்லது எமது முகவர்கள் (தகவலை இரகசியமாகப் பேணுவோம் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளவர்கள்) மட்டுமே இத்தகைய விபரங்களை அறிந்து கொள்ள முடியும். முதற் பெயர் மற்றும் கடைசிப் பெயர், வீட்டு அல்லது ஏனைய இயல் முகவரி, வீட்டு அல்லது அலுவலக மின்னஞ்சல் முகவரி அல்லது ஏனைய தொடர்பு கொள்ளும் விபரங்கள் அடங்கலாக ஒரு நபரை தனிப்பட்ட ரீதியில் இனங் காண உபயோகிக்கப்படுகின்ற எந்த விபரங்களும் தனிப்பட்ட விபரம் என்பதாக நாம் விளங்கிக் கொண்டுள்ளோம். எனினும் பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் தாங்கள் யார் என்பதை வெளிப்படுத்தாமலும், தனிப்பட்ட விபரங்களைப் பகிர்ந்து கொள்ளாமலும் LH இனது இணையத்தளத்தின் பக்கங்களுக்கு செல்லக்கூடியதாக உள்ளது. ஆனாலும் பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் உடனான நேரடி ஈடுபாட்டைக் கொண்ட குறிப்பிட்ட சில தெரிவுகள், சலுகைகள் மற்றும் சேவைகளை அவர்கள் அடைந்துகொள்ள முடியாமல் போகலாம். பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் இணையத்தளத்தில் தங்களது தனிப்பட்ட விபரங்களைப் பகிரும் சமயத்தில் அத்தகைய தனிப்பட்ட விபரங்களை நாம் LH அல்லது LH இன் மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களுக்கு மாற்றீடு செய்யக்கூடும்.

தனிப்பட்ட விபரங்கள் தேவைப்படுமிடத்து அவை சேகரிக்கப்படுகின்ற நேரம், தனிப்பட்ட விபரத்தை நாம் எவ்வாறு உபயோகிப்போம் போன்ற விபரங்களை நாம் பாவனையாளர்களுக்கு/பார்வையாளர்களுக்கு அறியத்தருவதற்கு முயற்சிப்போம். வழமையாக நாம் சேகரிக்கின்ற தனிப்பட்ட விபரங்களை, பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் கேள்விகள், நடைமுறை மற்றும் கோரல்களுக்கு பதிலளிக்க அல்லது அவர்கள் வேண்டுதலின் பேரில் மேலதிக சேவைகளை அடைந்து கொள்ள மட்டுமே நாம் உபயோகிக்கின்றோம். புதிய உற்பத்திகள்/சேவைகள், விசேட சலுகைகள் அல்லது பாவனையாளர்களுக்கு/பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டக்கூடியவை என LH கருதுகின்ற தகவல்களை நாம் அஞ்சல் மூலமாக பாவனையாளர்கள்/பார்வையாளர்களுக்கு அனுப்பிவைக்கக்கூடும். அத்தகைய அஞ்சல்களை தற்போது பெற்றுக்கொள்கின்ற பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் அத்தகைய அஞ்சல்களைப் பெற்றுக்கொள்வதை தவிர்த்துக் கொள்ள விரும்பினால், தயவு செய்து அத்தகைய வேண்டுகோள்களை எமக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வையுங்கள்.

எமது இணையத்தளத்திற்குள் நுழைகின்ற ஒவ்வொரு பார்வையாளரினதும் எல்லைப் பெயர் (domain) மற்றும் மின்னஞ்சல் முகவரி (சாத்தியமான அளவில்) எமது இணையத்தள சேர்வர் (server) சுயமாகவே இனங்கண்டு கொள்கின்றது. பாவனையாளர்கள் அடைந்து கொள்கின்ற தனித்தனி பக்கங்கள், குறிப்பிட்ட பக்கங்களில் சராசரியாக அவர்கள் செலவிட்ட நேரம், பாவனையாளர் ஒருவர் மீளவும் எமது இணையத்தளத்திற்குள் நுழைகின்ற போது அவரை இனங்காணுதல் போன்ற ஒட்டுமொத்த தகவல் விபரங்களை சேகரிப்பதற்கு ‘cookies’ எனப்படுகின்ற தொழில்நுட்பம் உபயோகிக்கப்படலாம். இவ்வாறாக சேகரிக்கப்படுகின்ற தகவல்கள் எமது இணையத்தளத்தின் உள்ளடக்கங்கள் மற்றும் பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் இணைய அனுபவத்தை அறிந்து கொள்ளவோ அல்லது மேம்படுத்துவதற்கோ எமது பக்கங்களை பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் தனிப்பட்ட தேவைப்பாடுகளுக்கு அமைவாக வடிவமைப்புச் செய்யவோ மட்டுமே உள்ளக ஆய்வுகளுக்காக உபயோகிக்கப்படுவதுடன், சட்டரீதியான தேவைகளின்றி LH இற்கு வெளியில் வேறு எந்தவொரு நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது.

LH இணையத்தளம் சிறுவர்களைக் கவரும் வடிவமைப்பில் கட்டமைப்புச் செய்யப்படவில்லை. 16 வயதிற்கு கீழ்ப்பட்ட எவரிடமிருந்தும் தனிப்பட்ட விபரங்களைச் சேகரிப்பது எமது நோக்கமல்ல.

இந்த இணையத்தளத்துடன் தொடர்புபட்டுள்ள இணைப்புக்கள் தனிப்பட்ட விபரங்களின் இரகசியத் தன்மையைப் பேணும் கொள்கையைக் கொண்டிராத வேறு தளங்களுக்கு பாவனையாளர்களை/பார்வையாளர்களை இட்டுச் செல்லலாம். தனிப்பட்ட விபரங்களைப் பேணுவதை மதிக்கின்ற தளங்களை மட்டும் தொடர்புபடுத்துவதற்கு நாம் முயற்சிப்போம். ஏனைய இணையத்தளங்களினால் பின்பற்றப்படுகின்ற தனிப்பட்ட விபரங்களைப் பேணும் நடைமுறைகளுக்கு நாம் பொறுப்பு கூற முடியாது.

LH இணையத்தளத்தை உபயோகிப்பதன் மூலமாக, தனிப்பட்ட விபரங்களைப் பேணும் எமது இணைய கொள்கையின் விதிமுறைகள்,மேற்குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தனிப்பட்ட விபரங்களை LH உபயோகிப்பதையும், இணையத்தளத்தில் LH தனிப்பட்ட விபரங்களைச் சேகரிப்பது தொடர்பாக விளக்கப்பட்டுள்ளதையும் பாவனையாளர்களும்/பார்வையாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என்று கருதப்படும். தனிப்பட்ட விபரங்களைப் பேணும் இணையக் கொள்கையில் மாற்றங்கள் ஏதும் இடம்பெறுமிடத்து அத்தகைய மாற்றங்களை அனைத்து பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு நாம் எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வதுடன், அத்தகைய மாற்றங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்கு எமது இணையத்தளத்தில் காட்சிப்படுத்துவோம்.

தனிப்பட்ட விபரங்களின் இரகசியத்தைப் பேணும் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுமிடத்து, பாவனையாளர்களும்/பார்வையாளர்களும் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளமைக்கு இணங்க சேகரிக்கப்பட்டுள்ள தகவல் விபரங்கள் தொடர்பில் சட்டரீதியான தேவைகளின்றி, மாற்றங்களுக்கு உட்படாது. தனிப்பட்ட விபரங்களின் இரகசியத் தன்மையைப் பேணும் கொள்கையில் குறிப்பிட்டதிலிருந்து வேறுபட்ட முறையில் தனிப்பட்ட தகவலை உபயோகிக்க நாம் தீர்மானிக்கும் சந்தர்ப்பத்தில், பாவனையாளர்களின்/பார்வையாளர்களின் இறுதியாக தெரியப்படுத்தப்பட்ட முகவரிக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாக அறியத்தருவோம். தனிப்பட்ட விபரங்களை நாம் வேறுபட்ட முறையில் உபயோகப்படுத்துவதை பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளாது விட்டால் வேறுபட்ட வழியில் அவற்றை உபயோகிக்க வேண்டாம் என்று அவர்கள் எமக்கு எழுத்து மூலமாக கோரிக்கை விட முடியும். அவர்கள் ஆட்சேபனை எதனையும் தெரிவிக்காத பட்சத்தில், பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் வேறுபட்ட வழியில் அவர்களுடைய தனிப்பட்ட விபரங்கள் உபயோகிக்கப்படுவதை ஏற்றுக்கொள்கின்றனர் என்றே கருதப்படும்.

மின்னஞ்சல் தொடர்பாடல் முறை பாதுகாப்பற்றது என்பதை கவனத்தில் கொள்வது மிக முக்கியமாகும். மின்னஞ்சலின் பாவனையில் ஆபத்து என்பது உள்ளார்ந்த ஒன்றாகவே உள்ளது. மின்னஞ்சல் மூலமாக எம்மிடம் தகவல்களைக் கோரும் போது அல்லது படிவங்களை அனுப்பி வைக்கும் போது (உதாரணத்திற்கு எமது இணையத்தளத்திலுள்ள எம்மைத் தொடர்பு கொள்ளும் பகுதி) தயவு செய்து இதனை கவனத்தில் கொள்ளுங்கள். பாவனையாளர்கள்/பார்வையாளர்கள் எவ்விதமான அந்தரங்க தகவலையும் (அதாவது கடனட்டை தொடர்பான விபரங்கள்) மின்னஞ்சலை உபயோகிக்கும் போது உள்ளடக்க வேண்டாம் என நாம் பரிந்துரைக்கின்றோம். பாவனையாளர்கள்/பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுடனான எமது மின்னஞ்சல் தொடர்பாடல்களில் எவ்விதமான அந்தரங்கமான தகவல்களும் உள்ளடக்கப்பட மாட்டாது.

லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட்
No. 101, மாயா அவென்யூ,
கொழும்பு 06.