Logo

நிலைபேற்றியல் கொள்கை

லாஃப்ஸ் தனது வியாபார தீர்மானங்களை மேற்கொள்ளும் போதும் எப்போதும் சூழல், சமூக மற்றும் பொருளாதார நிலைபேற்றியலை கருத்தில் கொள்ளும். நிலைபேற்றியல் மீது நாம் கொண்டுள்ள ஈடுபாடானது சூழல், சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை முகாமைத்துவம் செய்வதற்கும் அப்பாற் சென்று, எம்முடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பகிரப்பட்ட அடிப்படையிலான பெறுமதியைத் தோற்றுவிப்பதில் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம். அதிசிறந்த பெறுபேறுகளை விநியோகிப்பதன் மூலமாக லாஃப்ஸ் நிறுவனத்தின் நிலைபேற்றியல் மீது நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நிலைபேற்றியல் மீதான எமது அர்ப்பணிப்புக்களை எட்டும் அல்லது விஞ்சும் வகையில் நாம் தொழிற்படுவதுடன், லாஃப்ஸ் நிறுவனத்திற்கும், நாம் தொழிற்படுகின்ற தொழிற்துறையிலும் நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகளை ஊக்குவித்து அதன் மூலமாக நிலைபேற்றியல் கலாச்சாரமொன்றை நாம் தோற்றுவிப்போம். எமது குறிக்கோளை நாம் முன்னெடுத்துச் செல்லும் பயணத்தில் எமது நாட்டில் நிலைபேற்றியலுக்கு முன்னுதாரணமாக மாற வேண்டும் என்ற இட்சியத்தையும் முன்னெடுப்போம்.

நிலைபேற்றியல் சபை

குழுமத்தில் பொறுப்புமிக்க பதவிகளை வகிப்பவர்களைக் கொண்ட அணி ஒன்று எமது நிலைபேற்றியல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து வருகின்றது. ஒரு ஆண்டிற்கான செயற்பாடுகளும், நீண்ட கால அடிப்படையிலான மூலோபாயங்களும் பணிப்பாளர் சபையின் வழிகாட்டலின் கீழும், ஆலோசனையுடனும் வடிவமைக்கப்படுகின்றன.